சுற்றறிக்கை காலாவதியான பின்னர் அரச பணியாளர்கள் 5 நாட்கள் கடமைக்கு அழைக்கப்படுவர் – பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை!

Sunday, August 14th, 2022

அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை காலாவதியானதன் பின்னர் அரச பணியாளர்களை வாராந்தம் 5 நாட்களுக்கும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி குறித்த சுற்றறிக்கை காலாவதியாகவுள்ளது. இதன்படி, குறித்த சுற்றறிக்கை காலாவதியாகுவதற்கு முன்னர் அரச பணியாளர்களை சேவைக்கு அழைக்கும் முறைமை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அந்த அமைச்சின் செலயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னே தெரிவித்தார்.

பணிக்கும் செல்லும் அரச பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி, ஒரு மாதத்துக்கு செல்லுபடியாகும் வகையில் அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதற்கு முன்னரும் எரிபொருள் பிரச்சினையை கருத்திற் கொண்டு பல சந்தர்ப்பங்களில் அரச பணியாளர்களை பணிக்கு அழைக்கும் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: