EPDPNEWS.COM வாசகர்களுக்கு எமது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Saturday, October 29th, 2016

இன்றையதினம் ஒளி தரும் தீபத் திருநாளை உலக வாழ் இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இந்நாள் எமது இணையத்தள வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிரந்தர ஒளி கிடைக்கும் நாளாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் எமது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கின்றோம்.

தீபம் என்றால் ஒளி கொடுக்கும் விளக்கு, ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் அகற்றி ஒளி தரும் பண்டிகை என்பதே இநச்த தீபாவளி தினமாகும் ஆகும். மஹா விஸ்ணு தனது கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.  தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.  இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.

ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ´அர்த்தநாரீஸ்வரர்´ உருவமெடுத்தார்.

நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும்.

எனினும் பெரும்பாலானோர் அறிந்த புராணக் கதையாக அமைவது,  மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்றார். அபபோது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பொற்றெடுத்தார்கள்.

அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.

பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது.

நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.  நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார்.

அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார். நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும்.

ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப்படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

தீபாவளி நரகாசுரன் என்ற தீமையை அழித்த நாள். அதனால் அன்று தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.

1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர். மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

happy_diwali copy

Related posts:

மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவ...
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
இந்த வருட வரவு செலவுத் திட்டம் சவாலானதாக அமையும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெ...