சுற்றறிக்கையை மீறி நிதி சேகரிக்கும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – கல்வி அமைச்சு!

Friday, February 3rd, 2017

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி தாம் விரும்பிய படி அதிபர்கள் பாடசாலைகளில் நிதி சேகரிப்பார்களாக இருந்தால் அந்த அதிபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறான விடயங்களுக்கு எதிராக கல்வி அமைச்சின் உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளின் அதிபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலை தொடர்பில் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு முற்றிலும் முரணானது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி பாடசாலையின் மாணவர் அனுமதிக்காகவோ அல்லது பாடசாலையின் பெயரைத் தமது விருப்புக்கேற்ப பயன்படுத்தியோ அன்பளிப்பாகவோ அல்லது நன்கொடையாகவோ நிதி சேகரிக்க முடியாது .

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி அதிபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக்காகவென அல்லது பாடசாலை சார்ந்த செயற்பாடுகள் எனக்குறிப்பிட்டு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்களானால் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்

Ministry_of_Education-------------------------------------

Related posts:

அதிக பணிச்சுமை - தாதியர்களுக்கு பாரிய அசௌகரியம் - அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சுட்டிக்காட்டு!
எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது – நாடாளுமன்ற உற...
மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் - நீர்க்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் ஜீவன் தொண்டமா...