சுற்றறிக்கையின் பிரகாரமே மாணவர்கள் உள்வாங்கப்படுவர் – அமைச்சரவையிலும் அங்கீகாரம் கல்வி – அமைச்சர் தெரிவிப்பு!

2025ஆம் ஆண்டு மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளை திருத்தம் செய்வதற்கும், குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளின் பிரகாரம் மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில்,வெளிப்படைத் தன்மையுடனும், முறைகேடுகள் குறைவான வகையிலும் கல்வி அமைச்சால் வெளியிடப்படும் சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் - நேபாளம்!
ஒக்டோபரில் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம்!
வடமராட்சி கிழக்கில் தே.அ.அட்டை வழங்குவதற்கான துரித செயற்பாடுகள்!
|
|