‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதி திட்டம்!
Monday, November 6th, 2017
கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதி திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டிலுள்ள தேசிய, மாகாண பாடசாலைகளிலும், தனியார் – சர்வதேச பாடசாலைகளிலும் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்கும் சுரக்ஷா காப்புறுதி அனுகூலங்கள் உரித்தாகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிள்ளைக்கும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் கடந்த மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வந்தது.
இதுவரையில் 30 மாணவர்கள் காப்புறுதி பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் நால்வருக்கு ஏற்கனவே அனுகூலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
யாழ். மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று!
துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி அறிவிப்பு!
அதிகரிக்கும் வட்டி வீதம் - இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!
|
|
|


