சுயநல ஆயுத வன்முறையே 13 ஐ கிடப்பில் போடச் செய்தது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!

Wednesday, August 2nd, 2023

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்த வேண்டும் என்தே எமது தொடர்ச்சியான நிலைப்பாடாக இருந்துவருகின்றது. அதிலும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு முதற்படியாக இருக்கும் என்பதும் எமது நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (02.08.2023) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த  ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்  மேலும் கூறுகையில் –

1987 ஆம் ஆண்டு ஜுலை 29 ஆம் திகதி அன்றைய பாரத பிரதமாரான ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கான பொறிமுறை மேற்கொள்ளப்பட்டது.

ஆயினும் அது முழுமையாக நடைமுறைக்கு வந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்புகளால் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டு ஆயுத வன்முறைகளை அதிகரித்திருந்தது.

தற்போது இந்தியாவும் அதேபோன்று பல சர்வதேச நாடுகளும் தமிழர்களுக்கான தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக அதனை ஆரம்பிக்கலாம் என வலியுறத்திவருகின்றன.

இதேவேளை தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் அதனையே விரைவாக நடைமுதுறைப்படுத்துமாறு வலியுறுத்திவருகின்றார்.

இந்நிலையில் இந்திய தூதுவரை சந்தித்த சில கட்சிகளின் பிரதிநிதிகள் 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால் இவ்விடயத்தை 33 ஆண்டுகளாக எமது கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்திவந்து கொண்டிருக்கின்றது.

அதிலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தவதனூடாக எமது மொழிக்கான அங்கிகாரமும் உறுதிப்படுத்தவதற்கான சாத்தியமும் உள்ளது. எனவேதான 13 ஆவது அரசியல் திருத்தத்தை ஆரம்ப பள்ளியாக கொண்டு எமது தீர்வை நோக்கி பயணிப்பொம் என எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்சியாக வலியுறுத்திவருகின்றார்.

ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதே சிறந்தாது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அமைச்சர் ராஜிதவின் பிரதி தலைவர் பதவி தொடர்பில் தெளிவுபடுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக...
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி எரிபொருளை பெறமுடியும் - வலுசக்தி அமைச்சர் தெரிவ...
சூரிய மற்றும் காற்றாலைகளால் இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக...