சுமார் 66 ஆயிரம் பொலிசார் தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள்!

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசார் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வாக்களிப்புக்குப் பின்னர் முப்படைகளை கடமையில் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் விசேட அதிரடிப்படையினரின் சேவையைப்பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கை - இந்தியா இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளமையை உணர்ந்து வியக்கின்றே...
பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனாவால் மக...
வகுப்பறையில் விரோதம்’ - சக மாணவிகளுக்கு விசம் கலந்த நீரை கொடுத்த மாணவி - நாராம்மல பகுதி பாடசாலையில் ...
|
|