சுமந்திரன எம்.பியை தோற்கடித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரானார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
Sunday, January 21st, 2024
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
வாக்கெடுப்புகள் நிறைவு பெற்றிருந்த நிலையில், முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சிறிதரனுக்கு ஆதரவாக 186 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. சுமந்திரன எம்.பிக்கு 137 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தத.
இதன்படி 50 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 321 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இதில் கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா நடுநிலை வகித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது
அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதன் முறையாகும். அதனடிப்படையில். பொதுக்குழுவில் இருந்து 325 பேரும், மத்திய செயற்குழுவில் இருந்து 50 பேரும் இணைந்து இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய கட்சியின் தலைவர் தெரிவு நடைபெற்றது
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்ப் பதவிக்கு போட்டிட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


