சுபீட்சம்மிக்க பொருளாதாரத்துடன் , சிறந்த கல்வியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
Friday, June 23rd, 2017
இரஜரட்ட மக்களுக்கு சுபீட்சம்மிக்க பொருளாதாரத்துடன் அவர்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தின் பல பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை மாணவர்களுக்கு கையளித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்பாடுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.
60 வருட காலமாக காணப்பட்ட ரஜரட்ட மக்களின் நீர்த்தேவை பூர்த்தியடையும் வகையில் அவர்களது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக இலங்கையின் பாரிய நீர்த்தேக்கமான மொரகஹகந்த களுகங்கை செயற்திட்டங்கள் தற்போதைய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டதென இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, அச்செயற்திட்டங்களுடன் இன்று ரஜரட்ட மக்களின் கனவுகள் நிறைவேறுவதாக தெரிவித்தார். எதிர்வரும் பெரும்போகத்தின் பின்னர் மீண்டும் நீர்ப்பிரச்சினை தொடர்பாக பேச வேண்டிய தேவை இருக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|
|


