சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய – இலங்கை நாடுகள் முயற்சி – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!
Friday, March 22nd, 2024
இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த முயல்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாயிரமாம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கையின் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவதில் அதன் நோக்கத்தை சிறப்பாக செயற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
உலகளாவிய ரீதியாக இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் அண்டைய நாடு என்ற அடிப்படையில் இலங்கை அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது பிரித்தானியா!
மின் பாவனையாளர்களிடமிருந்து மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது மின் துண்டிப்பும் இல்லை - மின்...
சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு - இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவிப்பு!
|
|
|


