சுசந்திகா முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த விளையாட்டுத்துதறை அமைச்சர்
Friday, June 9th, 2017
இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை விளையாட்டுத்துதறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார்.
சுசந்திகா ஜயசிங்க தமக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றும் அதனால் தனக்கு ஒலிம்பிக் போட்டியில் கிதை;த வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விற்பனை செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தமை குறித்தே விளையாட்டுத்துதறை அமைச்சர் இவ்வாறு நிராகரித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில், இவை ஆதாரமற்ற போலிக் குற்றச்சாட்டுக்கள் என அமைச்சர் குறிப்பிட்டார். தமக்குரிய சம்பளக் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டதாக சுசந்திகா குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த சமயம், சுசந்திகாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகும். அவருக்கு மாதாந்தம் 60ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த வீராங்கனைக்கு இராணுவமும் 60 ஆயிரம் ரூபா வழங்குவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த கொடுப்பனவு நிறுத்தப்படவில்லை. சுசந்திகா அரச உத்தியோத்தர் என்பதால் ஏனைய அரச பணியாளர்களுக்கான அனைத்து விதி முறைகளும் அவருக்கு பொருத்தமானவையென அமைச்சர் குறிப்பிட்டார்
Related posts:
|
|
|


