ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று கிராமக்கோட்டடி வீதி மக்கள் பாவனைக்காகத் திறப்பு!

Thursday, May 3rd, 2018

அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக மயிலிட்டி சந்தியிலிருந்து மாவிட்டபுரம் சந்திநோக்கி செல்லும் கிராமக் கோட்டுசந்திவீதி மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 25.04.2018 அன்று கொழும்பில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களையும், அவரது செயலாளர்களையும் சந்தித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே மேற்குறிப்பிட்ட கோரிக்கையை கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேசத்தின் பிரதேச சபை உறுப்பினருமான இராமநாதன் ஐங்கரன் மேற்குறித்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

குறித்த சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையிலேயே இன்றையதினம் குறித்த கிராமக் கோட்டுசந்திவீதி  மக்கள் பாவனைக்காக திறந்தவைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு வலயமாகவிருந்த குறித்த பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்து.

இதனிடையே மயிலிட்டி சந்தியிலிருந்து கட்டுவன் சந்திநோக்கி செல்லும் பிரதான வீதியும் மக்களது பாவனைக்காக  விரைவில் திறக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் - தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான ...
பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்ப...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவை நனவாக்கும் வன்னேரிக்குளம் புத்தெழுச்சி குழுவின் செயற்திட்டங்கள் -...