அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவை நனவாக்கும் வன்னேரிக்குளம் புத்தெழுச்சி குழுவின் செயற்திட்டங்கள் — ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் அமீன் சுட்டிக்காட்டு!

Wednesday, July 26th, 2023

கிராமங்களின் எழுச்சிக்கான கௌரவ அமைச்சர டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எதிர் பார்ப்பை வன்னேரிக்குளம் புத்தெழுச்சி குழுவின் செயற்திட்டங்கள் பிரதிபலிப்பதாக ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்தார்.

கரைச்சி வன்னேரிக்குளம்  கிராம சேவகர் பிரிவுக்கான புத்தெழுச்சி குழுக் கூட்டம் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அபிவிருத்தியின் வெற்றி என்பது கிராமங்கள் தமது தேவைப் பூர்த்திக்காக தங்கள் சொந்தக் காலில் நிற்பது என்ற கௌரவ அமைச்சரின் மன ஆதங்கத்தை நினைவு கூர்ந்து உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில்;

அதிகாரிகள் பொது அமைப்புக்களின் இணைந்த செயற்பாட்டில் தான் இந்த செயற்திட்டங்களை வெற்றி கரமாக முன்கொண்டு செல்ல முடியும் என்பதை  இக் குழு உறுப்பினர்களின் கூட்டான செயற்பாட்டின் வழிமுறை மெய்ப்பித்து நிற்கிறது.

உணவுத் தேவையில் தங்கள்  சுய தேவைகளை அடைந்து கொள்ளும் வகையில்   இக் குழுவின் பயனாளிகள் சியாப் திட்டத்தின் ஊடாக கிடைத்த உதவிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் முறையான வழிகாட்டலுடன் வெற்றி கரமாக முன்னெடுத்திருப்பது சிறந்த முன்னுதாரணமான நடவடிக்கையாகும்.

புதிய முயற்சியாளர்களுக்காக புலம்பெயர் உறவுகளின் உதவிகள் மற்றும் அரச அரசார்பற்ற அமைப்புக்களின் உதவிகளை நீங்கள்பயனுள்ள வகையில் முகாமை செய்வதுடன் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக முன்பள்ளிகளுடனும் பாடசாலையுடனும் இணைந்து மேற்கொண்டு வரும் பணிகளையிட்டு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு சார்பில்  எனது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த முன் மாதிரியை சுற்றியுள்ள அயல்கிராமங்களும் விளங்கிக் கொண்டு தமது கிராமத்துக்கான சாத்தியமான திட்டங்களை புத்தெழுச்சி குழுக்கள் ஊடாக செயற்படுத்தி அதன் நன்மைகளை கிராமத்தவர் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில்  கிராம மட்ட உத்தியோகத்தர்கள்  பொது அமைப்புக்களுடன் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு உத்தியோகத்தர்களான பிரமிளன், பாரதி மற்றும் மதிவதனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

00

Related posts:


வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கே...
நாடாளுமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று - குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூடும் என ப...
அனைத்து திரிபடைந்த கொரோனான வைரஸ்களினாலும் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் தடுப்பூசிக்கு உண...