சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றாது பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்தகளின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பெஸ்டியன்மாவத்தை, மாகும்புற, வவுனியா, கடவத்தை மற்றும் கடுவளை ஆகிய பிரதான பெருந்து தரிப்பிடங்களிலும் சோதனை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கொமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்தார்.
இதேவேளை, நாளாந்தம் முன்னெடுக்கப்படும் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை எதிர்வரும் நாட்களில் 60 தொடக்கம் 65 வரை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நாளாந்தம் 48 ரயில் சேவைகளே முன்னெடுக்கப்படுகிறதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|