சுகாதார வழிமுறைகளை மீறிய 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
Wednesday, August 11th, 2021
கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளை மீறி ஆசன எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மாகாணங்களுக்குள் பயணிக்கும் 18 பேருந்துகளின் வீதி அனுமதிபப்த்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஆசன எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகளுடன் மாகாணங்களுக்கு இடையில் பயணித்த 50 பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சுனாமி ஒத்திகை!
இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு - யாழ்.போதனாவில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...
அதிக விலைக்கு அரிசி விற்றால் 100 ஆயிரம் தண்டம் - அமைச்சரவையில் தீர்மானம்!
|
|
|


