சுகாதார வழிகாட்டுதல் பின்பற்றாவிட்டால் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை!

Sunday, December 20th, 2020

சுகாதார வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் சில இடங்களில் தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதர்துடன் கொழும்பில் 9 பொலிஸ் பிரிவுகளிலும் 32 கிராமசேவையாளர்கள் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் நடைமுறையில் உள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியே செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அவ்வாறு எவராவது வெளியே சென்றால் தனிமைப்படுத்தல் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் ௲ பிசிஆர் சோதனைக்காக மாதிரிகளை வழங்குமாறு கேட்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பை வழங்குங்கள் சுகாதார வழிமுறைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தாதீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் விதிமுறைகளை உரிய விதத்தில் பின்பற்றினால் கூடிய விரைவில் குறிப்பிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படும் என தெரிவித்துள்ள அஜித்ரோகண பொதுமக்கள் அவற்றை கடைப்பிடிக்க மறுத்தால் தனிமைப்படுத்தலை மேலும் நீடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்

Related posts: