சுகாதார வழிகாட்டலுக்கு முக்கியத்துவம் அளித்து புனித வெசக் தின நிகழ்வு!
 Wednesday, May 26th, 2021
        
                    Wednesday, May 26th, 2021
            
உலகம் முழுவதிலும் உள்ள பௌத்த மக்கள் சுகாதார வழிகாட்டலுக்கு முக்கியத்துவம் அளித்து இன்று புனித வெசக் முழுமதி தினத்தை கொண்டாடுகின்றனர்.
இந்தியாவில் புனித புத்த பூர்ணிமா எனவும் இலங்கையில் புனித வெசாக் எனவும் அழைக் கப்படும் பண்டிகை ஆண்டுதோரும் மே மாத பெளர்ணமி நாளன்று உலகில் உள்ள அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சித்தார்த்த கௌதமரின் பிறப்பு பரிநிர்வாணம் மற்றும் கௌதம புத்தரின் மறைவு என்பவற்றை குறிக்கும் வகையில் இந்த புனித வெசக் முழுமதி தினத்தை பௌந்து மக்கள் அனுஷ்டிக்கின்றனர். களனியின் நாக மன்னன் மணியக்கிக்காவின் அழைப்பின்பேரில் புத்தபெருமான் இலங்கைக்கு விஜயம் செய்த நாளாகவும் இது விளங்குகிறது. விஜயனின் வருகையும் துட்டகைமுனு மன்னனினால் ருவான்வெளிசாய அமைக்கப்பட்டதும் இந்த வெசக் முழு நோன்மதி தினத்தில் இடம்பெற்றருக்கின்றன.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரசு தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த வருட புனித வெசக் முழுமதி தினத்தை சுகாதார வழிகாட்டல்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனுஷ்டிக்குமாறு சுகாதாரத்துறை கேட்டுள்ளது.
இதேவேளை,புத்த பெருமானின் போதனைகளை புரிந்துகொண்டு சவால்மிக்க இந்த காலப்பகுதியை எதிர்கொண்டு தர்ம நெறியுடன் செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இம்முறை புனித வெசக் தேசிய வைபவம் நாகதீப விகாரையை அடிப்படையாகக்கொண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய தொற்று நிலைமை இதற்கு தடங்கலாக அமைந்துள்ளது. ஆனால் புனித வெசாக் தினத்தை அர்த்தம் மிக்கதாக கொண்டாடுவதற்கு இந்த தொற்று எந்த விதத்திலும் தடங்கல் இல்லை. பூஜை வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வீடுகளிலிருந்து வெசாக் தினத்தை கொண்டாடுமாறு பிரதமர் மக்களைக் கேட்டுள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்சவின் எண்ணக் கருவுக்கு அமைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சமாதி நிகழ்ச்சி இன்று ஹணுப்பிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெறும்
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        