இலங்கை- இந்திய மீனவர்கள் பேசுவதை விட மட்ட உயரதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடாத்து வலுவானது – யாழ். மாவட்டக் கடற்தொழிலாளர் சம்மேளனத் தலைவர்  என். வி. சுப்பிரமணியம்

Wednesday, May 11th, 2016

நாங்கள் அறிந்த வரை  டில்லி அரசுடனும்  , தமிழ் நாட்டு அரசுடனும்  பேசுவதாகத் தான்  தகவல் அறிகிறோம் . இலங்கை- இந்திய மீனவர்களிடம் தனியே பேசுவதை விட மேல் மட்ட உயரதிகாரிகள் , வெளிவிவகார அமைச்சர்கள் , மீன்பிடி அமைச்சர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடாத்தினால் வலுவானதாகவிருக்கும் என நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தோம். வருகிறோம்.

பலமுறை மீனவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தை முறிவடைந்ததன் காரணமாகவே நாங்கள் இந்தக் கோரிக்கையை முன் வைத்தோம் எனத் தெரிவித்தார் வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், யாழ். மாவட்டக் கடற்தொழிலாளர் சம்மேளனத் தலைவருமான என். வி. சுப்பிரமணியம் .

யாழ். ஊடக அமையத்தில் இன்று நேற்று மீனவர் பிரச்சினை தொடர்பில் டில்லி மத்திய அரசும் , இலங்கை மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடாத்துவது சாத்தியமாகுமா? ஏனெனில் , பிரச்சினைக்குரியது தமிழ்நாடு.  ஆகவே . இவ்வாறான பேச்சுவார்த்தை நம்பிக்கை தரக் கூடியதாக அமையும் என எதிர்பார்க்கிறீர்களா ? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், யாழ். மாவட்டக் கடற்தொழிலாளர் சம்மேளனத் தலைவருமான என். வி. சுப்பிரமணியத்துடன் வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட் ஆலம் , கிளிநொச்சி மாவட்டச் சமாசத் தலைவர் ஜோசப் பிரான்சிஸ் , முல்லைத் தீவு மாவட்டச் சமாசத் தலைவர் எஸ்.மரியராசா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Related posts: