சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும் – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

Tuesday, April 27th, 2021

வார இறுதி விடுமுறையின் பின்னர் பிரதான நகரங்களில் மக்கள் ஒன்றுகூடுவதால் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியம் சுதத் சமரவீர பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

மக்கள் கூடுதலாக ஒன்று சேர்வதால் கொவிட் தொற்று பரவும் ஆபத்து காணப்படுகின்றது. சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு அரச வைத்திய உத்தியோகத்தர் சங்கம் பொதுமக்களைக் கேட்டுள்ளது.

இவ்வாறு செயற்படாதவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அந்தச் சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர் நவிந்த சொய்சா தெரிவித்தார்.

நோயைத் துரிதமாக கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினரால் மாத்திரம் தனியாக இயங்க முடியாது, சுகாதாரப் பிரிவினருக்கு உயர்ந்தபட்ச ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

Related posts: