அரச வரி அறவிடும் செயற்பாடுகள் தனியார் நிறுவனத்திடம்?

Monday, September 5th, 2016

அரசாங்கத்தின் வரி அறவிடும் செயற்பாடுகளை தனியார் நிறுவனம் ஒன்றின் வசம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அரசாங்கத்தின் நிதிக் கொள்கையின் பிரகாரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பொறுப்புகளில் ஒன்றான வரி அறவிடும் செயற்பாடு தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இதற்காக குறித்த நிறுவனத்திற்கு வருடாந்தம் இருநூறு கோடி ரூபா கமிஷனாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இறைவரித் திணைக்கள ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நிதியமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை எதுவித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.அதே நேரம் கடந்த 29ம் திகதி இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கலந்துரையாடலும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இறைவரித் திணைக்கள ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

vat

Related posts: