சுகாதார நடைமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள் – யாழ்.மாவட்ட மக்களிடம் இராணுவக் கட்டளைத் தளபதி கோரிக்கை!

Tuesday, October 20th, 2020

யாழ்.மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கொரோனா தொற்று மிகவும் வலுவடைந்து வருகின்றது. அதேபோல வடக்கினை பொறுத்தவரைக்கும் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாவண்ணம் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

யாழ்.மாவட்டத்தினை பொறுத்தவரைக்கும் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று விடத்தல்பளை தனிமைப்படுத்தல் முகாம். மற்றது கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாம்.

தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமிற்கு நேற்று முன்தினம் 108 பேர் கொண்டுவரப்பட்டுள்ளார்கள். எனவே யாழ்ப்பாண மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக வடக்கு மக்களுக்கு இன்னொரு அச்ச நிலைமை காணப்படுகின்றது. தென்னிந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: