சுகாதார தொண்டர் நிரந்தர நியமனம் : வட மாகாண சுகாதார அமைச்சே தடை!

யாழ்.மாவட்டத்தில் பிரதேச சுகாரதார பணிமனையின் கீழ் உள்ள சுகாதார தொண்டர்கள் 820 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
யாழ் மாவட்டத்தில் உள்ள சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் நேற்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போதே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த நியமனத்தை வழங்க வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தடையாகவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார தொண்டர்கள் நியமனத்திற்கான அனுமதி கிடைத்த போதிலும் தற்போது வெற்றிடம் எதுவும் இல்லை அதனால் இந்த நியமனத்தை வழங்க முடியாது என சுகாதார அமைச்சர் கூறியுள்ளதாக ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மீறி தம்மால் எதனையும் எதுவும் செய்ய முடியாது என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
Related posts:
150ஆவது வருட சேவையை பூர்த்தி செய்யும் இலங்கை பொலிஸ் !
சுமந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநகரில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு!
சமையல் எரிவாயு போதுமானளவு சந்தைக்கு விநியோகம் - எரிபொருள் விநியோக நடவடிக்கையையும் தடையின்றித் தொடர த...
|
|