சுகாதார சேவை மேம்பாட்டிற்கு கியூபா ஒத்துழைப்பு!

Tuesday, May 1st, 2018

நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

கியூபாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்னவை சந்தித்த கியூபாவின் சுகாதாரஅமைச்சர் ரொபேற்றோ மொராலே இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது கியூபாவில் உற்பத்தி செய்யப்படும் ஒளடதங்கள், உபகரணங்களை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


பிளாஸ்ரிக் மாலைகள் இடியப்பம் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு விரைவில் த...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவி...
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம் - செப்டம்பரில் கடமைகள...