சுகாதார சேவைக்குழு உறுப்பினர்களின் சேவைக்காலம் நீடிப்பு!

அரச சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்களின் சேவைக்காலம் ஒருவருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக அரச ஆணைக்குழுவின் செயலர் எம்.ஏ.பி.தயாசெனரத் அறிவித்துள்ளார்.
தற்போதைய குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 2019 பெப்ரவரி 28 ஆம் திகதி முடிவடைந்ததையடுத்து 2019 மார்ச் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவின் தலைவராக ரஞ்சித் மலிகஸ்ரேயும் உறுப்பினர்களாக எஸ்.எம்.கோத்தாபாய ஜயரட்ணவும் சி.சண்முகமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இக்குழுவில் உறுப்பினர்களாகக் கடமையாற்றிய திருமதி டபிள்யூ. சுதர்மா கருணாரட்ன உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இவரது இடத்திற்கு எஸ்.எம் கோத்தாபாய ஜயரட்ண நியமனம் பெற்றுள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள மருத்துவ சேவை, தாதியர் சேவை, துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் நிர்வாக விடயங்கள் மேற்படி குழுவினால் கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|