அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை புதிய வருடத்திற்கும் செல்லுபடியாகும் – நிதியமைச்சு புதிய சுற்றறிக்கை!

Sunday, January 1st, 2023

அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் இந்த புதிய சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் மூலம் ஒதுக்கப்படும் ஒதுக்கீடு வரம்புகள் அடுத்த வருடத்திற்கு மிகையாகாத வகையில் செலவுகளை நிர்வகிப்பது அதிகாரிகளின் பொறுப்பு என வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக, 2023 ஆம் ஆண்டு அரசாங்க செலவினங்கள் முன்னெப்போதையும் விட மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவதற்கு அரசாங்க நிறுவனங்கள் வழங்கிய சுற்றறிக்கை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று புதிய சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: