சுகாதார அமைச்சுக்குள் பிரவேசித்து கலகம் விளைவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது – அமைச்சர் ராஜித்த சேனாரட்ன
Saturday, June 24th, 2017
பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று சுகாதார அமைச்சின் கட்டடத்திற்குள் பிரவேசித்து கலகம் விளைவித்த விதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் செயற்பாடுகளால் சுகாதார அமைச்சின் கட்டடங்கள் சேதமடைந்தன. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாடு டெங்கு ஆட்கொல்லியை சமாளிப்பதற்காக தத்தளிக்கும் வேளையில், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது நியாயமானதா என்றும் சுகாதார அமைச்சர் அரச மருத்துவ உத்தியோகத்தர் சங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.
Related posts:
மீண்டும் கராச்சிக்கான விமான சேவை ஆரம்பம்!
கொரோனா சோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு- அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டும் பரிசோதனை – நாளை முக்கிய...
சில தவறுகளினால் பெரும் நன்மை இழக்கப்பட்டது - அரசியலமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும் – ஜன...
|
|
|


