சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில்தற்கொலை முயற்சி!

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி யாழில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால்
பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். சாவகச்சேரி நகரசபை மண்டபத்திற்கு முன்பாகவுள்ள கேட்போர் கூடத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் குறித்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை சேர்ந்தவர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிக் கொள்ள முயற்சிக்கப்பட்ட நிலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Related posts:
இவ்வாண்டு 27603 பேருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு!
யாழில் சூடுபிடித்துள்ள மண் சட்டிகளின் வியாபாரம்!
பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் வாய்ப்பு!
|
|