சுகாதாரத்துறை எச்சரிக்கை – மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
முன்பதாக பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்திருந்தனர்.
இதனடிப்படையில், மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்தள்...
சீரற்ற காலநிலை தொடர்வதால் டெங்கு பரவும் வேகமும் அதிகரிப்பு!
யாழ் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்கேற்பு!
|
|