சீருடை வவுச்சர் முறையினை இரத்து செய்ய கோரிக்கை!

2017ஆம் ஆண்டு முதல் பழைய முறையின் கீழ் பாடசாலை சீருடைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கோரிக்கையடங்கிய கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வவுச்சர் முறையின் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கியிருந்த அழுத்தங்களை கருத்திற்கொண்டு இக்கோரிக்கையினை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே 2017 ஆம் ஆண்டு முதல் பழைய முறையின் பாடசாலை சீருடைத் துணியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
மீற்றர் வட்டி சட்டவிரோதமானது - யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!
ஜி.சி.ஈ. சாதாரணப் பரீட்சை மாற்றம் ஏதுமின்றி நடக்கும்!
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை இடைநிறுத்த வேண்டும் - தேசிய அமைப்புகளின் சம்...
|
|