சீரற்ற வானிலை – 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில்!
Tuesday, December 25th, 2018
வடக்கில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 11,310 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சியில் 24 முகாம்களிலும், முல்லைத்தீவில் 13 முகாம்களிலும், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒவ்வொரு முகாம்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பிரதேச செயலகங்களூடாக விநியோகிக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் கடந்த நான்கு நாட்களாக நிலவிய சீரற்ற வானிலையால் 23,054 குடும்பங்களை சேர்ந்த 73,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
ஐந்நூறு ரூபாய் இலஞ்ச நோட்டு பொலிஸார் ஒருவருக்கு வைத்தது ஆப்பு!
சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பஹ்ரைன் – நாளைமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு!
“யுக்திய” நடவடிக்கை இன்றுமுதல் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்ட பல இடங்களிலும் முன்னெடுப்பு!
|
|
|
எட்டு வருடங்களில் இரட்டிப்பாக அதிகரித்த வாகனங்களின் எண்ணிக்கை - அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!
அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்...
மறுசீரமைப்பு என்ற போர்வையில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை - மின்சார ...


