சீரற்ற காலநிலை – நிறைவுறுத்தப்படவுள்ள எரிபொருட்களை வெளியேற்றும் நடவடிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி துறைமுகத்திற்கு அருகில் உள்ள ரூமஸ்ஸல பகுதிக்கு நீரால் இழுத்து செல்லப்பட்ட க்லோரி – 2 – கோ என்ற இயந்திர படகிலிருந்து எரிப்பொருட்களை வெளியேற்றும் நடவடிக்கை இன்றைய தினம் நிறைவுறுத்தப்படவுள்ளது.
கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் டர்னி பிரதிப் குமார இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த இயந்திரப்படகிலிருந்து எரிபொருளை வெளியேற்றும் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக குறித்த நடவடிக்கை நேற்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஒரு மெற்றிக் டொன் எரிபொருள் வெளியேற்றப்பட்டதாகவும் எஞ்சியுள்ள 14 மெற்றிக் டொன் எரிபொருள் இன்றைய தினம் வெளியேற்றப்படவுள்ளதாகவும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சகல ஓய்வூதியர்களுக்கும் நாளை ஓய்வூதியம் வழங்கப்படும்!
நியூ டைமண்ட் கப்பல் விவகாரம்: கப்டனை சந்தேக நபராக பெயரிட சட்டமா அதிபர் ஆலோசனை!
வறட்சியால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்படும் சேதங்களை மதிப்பிடுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்...
|
|