சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை வருகை!
Monday, March 20th, 2017
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் சேங்க் வேங்குவேங் இன்று இலங்கை வரவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரும் சீன பாதுகாப்பு அமைச்சருடன் அமைச்சின் விசேட பிரதிநிதிகளும் வருகை தரவுள்ளனர்.
சீன பாதுகாப்பு அமைச்சர் நாளை முற்பகல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
நாளை மறுதினம் சீன பாதுகாப்பு அமைச்சர் உட்பட அவரது தூதுக்குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அதிகரித்து கொள்வது சீன அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு!
தாமதித்து சிகிச்சைக்கு வருவதினால், சில சமயங்களில் தொற்றாளர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் - யா...
ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் - சுகாதார அதிகாரிகள் ...
|
|
|


