சீனி உற்பத்தியில் தன்னிறைவை நிலைக்கு வர புதிய திட்டம்! – அமைச்சர் ரவி கருணாநாயக்க!

Wednesday, October 19th, 2016

இலங்கை சீனி உற்பத்தியில் 2025ஆம் ஆண்டளவில் தன்னிறைவை அடைவது தொடர்பிலான புதிய வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதற் கட்டமாக 2020ம் ஆண்டளவில் நாட்டின் மொத்த சீனித் தேவையில் நூற்றுக்கு 50 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி கரும்பு உற்பத்தியை மேம்படுத்த புதிதாக 15 தொழிற்சாலைகளை நிறுவத் தேவையான நடவடிக்கைகளை தற்போது தயாரித்து வருவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வருடாந்த சீனித் தேவை சுமார் ஏழு இலட்சம் மெற்றிக் தொன் எனவும், எனினும் தற்போது உள்நாட்டு சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நான்கில் இருந்து வருடாந்தம் 56,000 மெற்றிக் தொன் சீனியே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதற்கமைய நாட்டின் முழுத் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடிய அளவு சீனியை இலங்கையிலேயே தயாரித்தால், வருடாந்தம் சீனி இறக்குமதிக்காக செலவிடப்படும் 35 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் எனவும் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.  மேலும் நுகர்வோருக்கு தற்போது நிலவும் விலையை விட குறைந்த விலையில் சீனியை வழங்க முடியும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

123

Related posts: