சீனிக்கான வரி குறைப்பை விகாரையில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

தாம் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போதே, சீனிக்கான வரி 25 சதத்தால் குறைக்கப்பட்டமை தொடர்பில் செய்தி அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிந்து கொண்டதாக போக்குவரத்து, பெருந்தெரு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற விவாதங்களின் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் ஒருவர் தனது சுயாட்சி அதிகாரத்தின் அடிப்படையில் எதனையும் செய்ய முடியாது என தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, “சந்தையில் சுய அதிகாரம் பகிரப்பட்ட குழுவொன்று உள்ளது” எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயத்தை நாடாளுமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் - E.P.D.P. யின் முல்ல...
“அம்பாம் புயல்” - வடமராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஈ.பி.டி.பியின் யாழ...
நாட்டில் கடந்த ஆண்டு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர் - பேராதனை பல்கலைக்கழகத்தின...
|
|