சீனிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு!

Friday, September 16th, 2016

ஒரு கிலோவுக்கு 0.25 சதமாக இருந்த சீனிக்கான விசேட இறக்குமதி தீர்வை நேற்று நள்ளிரவு முதல் 1.75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி புதிய தீர்வை 2 ரூபாவாக இருக்கும். இதேவேளை, சிவப்பு சீனிக்கான இறக்குமதி தீர்வை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவாக இருக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது கடந்த புதன்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தேவைக்கு 10 வீதம் குறைவான வீதத்திலேயே சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன்படி இலங்கையில் வருடம் ஒன்றுக்கு 50ஆயிரம் மெற்றிக்தொன் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது. இதேவேளை இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டாலும் சீனியின் சந்தை விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என்றும் தொடர்ந்தும் சீனி கிலோ ஒன்று 95ரூபாவாகவே இருக்கும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

4

Related posts: