சீனா உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பில் நாளை கலந்துரையாடல் – கொமர்ஷல் உர நிறுவனம் அறிவிப்பு!
Sunday, January 9th, 2022
சீனாவிலிருந்து உரத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் அறிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமையக் குறித்த உரம் நாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் சீன உரத்தை ஏற்றிய கப்பலை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த கப்பலில் 8 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெப்ரவரி முதல் மீண்டும் 20 ரூபாவாகும் லொத்தர் சீட்டுக்கள்!
இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் - பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேர...
ஐந்தாண்டு விடுமுறையில் 2,000 அரச பணியாளர்கள் வெளிநாட்டு வேலைக்கு பயணம் - பொது நிர்வாக அமைச்சகம் தெரி...
|
|
|
20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் திருத்தங்கள...
பாடசாலை மாணவர்களில் 5 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் பத்தில் இருவருக்கு மந்தப் போசணை உள்ளதாக ஆய...
போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றியமைக்கப்பட்ட கெப் ரக வாகனம் - ஒன்றரை கோடி ரூபாய் பணத்த...


