பெப்ரவரி முதல் மீண்டும் 20 ரூபாவாகும் லொத்தர் சீட்டுக்கள்!
Saturday, January 28th, 2017
தேசிய லொத்தர் சபையினால் அச்சிட்டு விநியோகிக்கப்படும் அனைத்து விதமான அதிஷ்ட இலாபச் சீட்டு (லொத்தர்) வகைகளும் 20 ரூபா விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தேசிய லொத்தர் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 01ம் திகதி முதல் அனைத்து விதமான லொத்தர் வகைகளும் 30 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அவற்றின் விலையை 20 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
நிறைவுக்கு வந்தது யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்: ஜனாதிபதியுடன் நாளை பேச்சு?
மீண்டும் சமூகவலைத்தளங்கள் முடக்கம்!
மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனர் - நிதி இராஜாங்க அமைச...
|
|
|
'நாடும் தேசமும் உலகமும் அவளே' - அரசியல் துறையில் பெண்களது பங்கேற்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் –...
உலக ஊடகவியலாளர்கள் மாநாடு சியோல் நகரில் ஆரம்பம் - இலங்கை உட்பட 25 நாடுகளை சேர்ந்த 35 பேச்சாளர்கள் சி...
முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் நிறைய இருக்கின்றன - பிரத...


