சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு – இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும் என நிறுவனம் உறுதியளிப்பு!

Sunday, September 12th, 2021

இலங்கை மக்களுக்காக சைனோபார்ம் நிறுவனம் தொடர்ந்து தடுப்பூசி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட கடிதத்தை சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹேன சைனோபார்ம் நிறுவன தலைவரிடம் வழங்கியுள்ளார்.

சீனாவின் சைனோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹேன ஆகியோருக்கு இடையே இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இலங்கை மக்களுக்காக சைனோபார்ம் நிறுவனம் தொடர்ந்து தடுப்பூசி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி வழங்கிய கடிதத்தையும் தூதுவர் இதன்போது சைனோபார்ம் நிறுவன தலைவருக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட சைனோபார்ம் நிறுவன தலைவர், சைனோபார்ம் நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்குமென தெரிவித்துள்ளார்.

மேலும் சைனோபார்ம் தடுப்பூசியானது 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், 50 இற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் சைனோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் சைனோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு எவ்விதமான பாதகமான விளைவுகளும் இல்லையெனவும் அதன் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: