சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!
Tuesday, February 21st, 2017
இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கொங் சுவான்யோ இலங்கைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன வெளிவிவகார அமைச்சில், மூன்றாவது நிலையில் உள்ள உதவி வெளிவிவகார அமைச்சரான கொங் சுவான்யோ, ஆசிய மற்றும் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பானவராவார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் தொடர்பான செயற்பாடுகளை இடைநிறுத்த சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அத்துடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் இலங்கைக்கு விஜயம் செய்து, அரச தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்ததைகளை நடத்தியுள்ள நிலையில், சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சரின் இந்த திடீர் பயணம் இடம்பெற்றுள்ளமையானது இராஜதந்திர வட்டாரங்களின் கவனத்தை ஈரத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts:
|
|
|


