சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக இலங்கைக்கு – மார்ச் மாதம் நாட்டிற்கு வந்தடையும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022

சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அரிசி தொகை எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

முன்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் சீனத் தூதுவரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த அரிசித் தொகை இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

இது குறித்து சீனத் தூதுவர் தமக்கு அறிவித்துள்ளதாக நேற்றிரவு (18) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுகுறித்த கோரிக்கை கடிதத்தை சீனத் தூதுவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, வெளிவிவகார அமைச்சு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: