“சீதாஎலிய” கல்லை இந்தியாவுக்கு வழங்கியது இலங்கை!

இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ்குமார் சிங்கை சந்தித்து, இந்தியாவுடனான மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கட்ட இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
இராமாயணத்தின் படி சீதை சிறைபிடிக்கப்பட்ட இடம் என்று நம்பப்படும் இலங்கையின் சீதாஎலியாவில் கோயிலுக்கு அருகில் உள்ள ஓடையில் இருந்து பெறப்பட்ட கல்லையும் உயர்ஸ்தானிகர் மொரகொட இந்திய அமைச்சர் சிங்கிடம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிணை முறி : ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நிறைவு!
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வெப்பம் – எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து!
அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு வெளியான செய்தி உண்மைக்குப் புரம்பானது - இராணுவத் தளபதி!
|
|