சிவில் சமூகம் – இராணுவம் இடையிலான உறவு மூலம் இலக்குகளை அடைய முடியும் – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண!
Friday, March 12th, 2021
கல்வியின் மூலம் சிவில் சமூகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளை ஊக்குவிக்க முடியும் என்பதோடு , இதன் மூலம் உலகளாவிய இலக்குகளை இலகுவாக அடைய முடியுமென்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இரத்மலானையிலுள்ள ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துதள்ளார்.
அத்துடன் மக்கள் மத்தியில் ஒருமைப்பாடு, ஜனநாயக பங்கேற்பு, பொருளாதார சமத்துவம், பரஸ்பர புரிதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை பல்கலைக்கழக கல்வியூடாக வளர்க்க முடியுமென்பதை மனதில் கொள்ள வேண்டுமென்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உர மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு!
கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்லும் - அரச மரு...
எதிர்வரும் 07ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!
|
|
|


