சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடக்கில் விசேட விடுமுறை!
Friday, March 1st, 2019
இந்துக்களின் விஷேட தினங்களில் ஒன்றான சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் செவ்வாய்க்கிழமை 05.03.2019 அன்று வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.
மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தினத்திற்கான பதிற்பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் அவர் தெரிவித்துள்ளார் என அவரது ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
அனைத்து பேருந்துகளையும் GPS தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிக்க முடிவு!
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் நடைமுறையில் மாற்றம் - போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெர...
தடையின்றி மின்சாரம் வழங்குவதில் இலங்கை மின்சார சபை சிரமங்களை எதிர்கொள்கிறது – அமைச்சர் டலஸ் அழகப்பெர...
|
|
|


