சில பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

Wednesday, June 12th, 2019

அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரி மலை பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று(12) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி இடங்களில் இருந்து அநுராதபுரத்திற்கு வரும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு தங்குமிட வசதிகள் வழங்குவதற்காக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அநுராதபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூடப்படவுள்ளன. இந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாது - சிகரட் மற்றும் மதுசாரம் தொடர...
27 அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடிப்பு - வர்த்தகத்துறை அமைச்சு!
பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அகற்ற வவுனியா நகரசபை...