சில அரச நிறுவனங்களால் நாட்டுக்கு ஒரு இலட்சம் கோடி இழப்பு – மத்திய வங்கி ஆளுநர் அதிர்ச்சித்தகவல்!
Monday, September 12th, 2022
அரச நிறுவனங்களான கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கையிலும் அது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய நட்டம் ஈட்டும் நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் நிதி சுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட நிறுவனங்கள் பிரதான இடத்தை வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் காரணமாக தொடர்ந்தும் அரசாங்கத்தினால் மேலும் சுமைகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள அவர், இவ்வாறு நட்டம் ஏற்படும் நிறுவனங்கள் இனங்காணப்பட்டு அவற்றை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


