3 மாதங்களுக்கு  ஒரு தடைவை எச்.ஐ.வி .பற்றிப் பேச முடிவு – சுகாதாரப் பிரிவு!

Wednesday, March 28th, 2018

வடக்கில் எயிட்ஸ் தொற்று மற்றும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான நடவடிக்கைகள் அவற்றின் முன்னேற்ற நிலை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன மாவட்டந் தேறும் 3 மாதங்களுக்கு ஒரு தடவையும் மாகாண மட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒரு தடைவயும் இந்தக் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது;

எச்.ஜ.வி தொற்று மற்றுமட் எயிட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான மாகாண மட்டக் கலந்துரையாடல் மன்னாரில் அண்மையில் இடம் பெற்றது அதிலேயே மேற்குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டது எச்.ஜ.வி தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

முன்னைய வருடங்ளுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் இதன் தொற்று அதிகரித்துள்ளதாக பாலியல் தொற்றுத் தடுப்புப் பிரிவின் கொழும்பு தலமையகம் கூறியுள்ளது அதனால் வடக்கில் இதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது வடக்கில் கடந்த வருடம் மாத்திரம் 7 பேர் எச்.ஜ.வி தொற்றுக்கு அளாகியமை இனங்காணப்பட்டது நாடு முழுவதும் இவ்வாறு 284 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் .வடக்கில் கடந்த டிசம்பர் வரை 100 க்கும் மேற்பட்டவர்கள் இனங்கானப்பட்டனர். அவர்களில் சுமார் 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் நாடு முழுவதும் கடந்த டிசம்பர் வரை 2 ஆயிரத்து 844 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் அவர்களில் சுமார் 440 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அதனையடுத்து வடக்கில் மாவட்டம் தோறும் 3 மாதங்களுக்கு ஒரு தடவையும் இந்தக் கலந்துரையாடலை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது   என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர் .

Related posts: