சிறையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் இல்லை – விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Monday, May 25th, 2020

சிறைச்சாலைகளில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பதாலும், மருத்துவ பரிசோதனைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை என்பதாலும், கொரோனா தொற்றின் ஆபத்து அதிகமாகவுள்ளதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், இவற்றைக் கவனத்திற்கொண்டு தம்மை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை கேட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் அனுப்பிவைத்துள்ள மனு ஒன்றில், “தற்போதைய சூழ்நிலையில் எமது விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வினயமாய் வேண்டுகிறேரம்.

தற்போது கொரானா அதிகமாகமாய் பரவுகின்றது. சிறையில் சரியான சுகாதார வசதியில்லை. மருத்துவ பரிசோதனை சரியாகனடைபெறுவது இல்லை.

நாம் இங்கு 17, முதல் 20 வருடங்களாக மிக நீண்ட காலமாகமாக தடுத்துவைக்கபட்டுள்ளோம். குடும்பத்தை பிரிந்து அதிக காலாம் சிறையில் துன்பபடுகின்றோம். தயவு செய்து இந்தநிலை கவனத்தில் எடுத்து எம்மை விடுதலை செய்வதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் கொரோனா தொற்று எம்மை தாக்குவதற்கான சந்தர்பம் சிறையில் அதிகம் இருப்பதால் விரைவில் நடவடிக்கை எக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

முன்பதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான விஷேட குழுவினர் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்ததுடன் கைதிகள் தொடர்பான பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றையும் பிரதமரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: