சிறைச்சாலைகளின் உயர் பதவிகளில் மாற்றம் – அமைச்சர் சுவாமிநாதன் தீர்மானம்!
Friday, June 2nd, 2017
நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளின் உயர்பதவிகளிலும் மாற்றம் கொண்டுவர சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் தீர்மானித்துள்ளார்.
தற்போதைய நிலையில் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கு சிறைச்சாலை உயரதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அனைத்து சிறைச்சாலைகளிலும் உயர்பதவிகளில் மாற்றத்தைக் கொண்டுவர அமைச்சர் சுவாமிநாதன் தீர்மானித்துள்ளார்.
அத்துடன் அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நான்கு கைதிகள் தப்பிச் சென்ற விவகாரம் குறித்து நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்த அமைச்சர் சுவாமிநாதன், அது தொடர்பில் உடனடி விசாரணை அறிக்கையொன்றையும் கோரியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணம் -காரைநகர் இடையே விரைவு தபால் சேவை ஆரம்பம்
நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வு!
அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்...
|
|
|


