சிறைகளில் இருந்த 77 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Saturday, March 11th, 2017

மீனவர்கள் விடுதலை தொடர்பில் இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய, இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுள் 77 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 தமிழக மீனவர்களும், வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 தமிழக மீனவர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 85 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று 77 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ள 12 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

பூஸ்டர் தடுப்பூசியின் செயற்றிறன் எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும் பட்சத்தில், முகக்கவசம் அணிவதை தவிர...
பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு,...
கடற்றொழில் அமைச்சர் கரிசனையுடன் செயல்படவில்லை என கூச்சலிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது - கடற்றொழில...