சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் பதிவு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நெருங்கிய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டில் 1,618 முறைப்பாடுகளும், 2023 ஆம் ஆண்டில் 1,639 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, உரிய தெளிவுப்படுத்தல்கள் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு : வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாடு - அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்...
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி - ஜனாதிபதி ரணில் ...